News December 21, 2025
மீண்டும் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி!

<<18568504>>ஆஸி., துப்பாக்கிச்சூட்டின்<<>> அதிர்ச்சி அடங்குவதற்குள், தெ.ஆப்பிரிக்காவில் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள பெக்கர்ஸ்டல் பகுதியில், மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியுள்ளனர். இதில், 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது, தெ.ஆப்பிரிக்காவில் 15 நாள்களில் நடைபெறும் 2-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும்.
Similar News
News December 25, 2025
செங்கோட்டையன் அதிர்ச்சி.. மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்

கடந்த ஏப்ரல் மாதம் அதிமுகவிலிருந்து விலகிய வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். SP வேலுமணியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த கோவையை சேர்ந்த சந்திரசேகர், அதிமுகவில் MGR இளைஞரணி மாநில இணை செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். சந்திரசேகரனை வளைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக வேலுமணி முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்.
News December 25, 2025
‘புறநானூறு’ படத்தில் இருந்து சூர்யா விலகியது ஏன்?

‘புறநானூறு’ படத்தில் இருந்து சூர்யா வெளியேறியதற்கு தெளிவான காரணம் தனக்கு தெரியவில்லை என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியாததே முக்கிய காரணமாக இருக்கும் என கருதுவதாக அவர் கூறியுள்ளார். சூர்யா பிஸியாக இருந்ததால் தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. ஆனால், இடைவெளிவிட்டு ஷூட்டிங் நடத்தினால், பட்ஜெட் எகிறும் என்பதால் சூர்யா வெளியேறி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. அதிரடி கைது

கடலூர் திட்டக்குடி அருகே நிகழ்ந்த பஸ் விபத்தில் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், டிவைடரில் மோதி எதிரே வந்த கார்கள் மீது மோதியதில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன. இந்நிலையில், பஸ் டிரைவர் தாஹா அலியை போலீஸார் கைது செய்துள்ளனர்.


