News December 21, 2025
நாகை: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 28, 2025
நாகை: ஆட்டோ திருடியவர் கைது

நாகூர் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது கவுஸ். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 25-ந் தேதி இரவு தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி விட்டு, காலையில் வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் ஆட்டோ இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆட்டோவை திருடிய லட்சுமாங்குடியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (41) என்பவரை கைது செய்தனர்.
News December 28, 2025
நாகை: கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்!

கீழையூர் அருகே பிரதாபராமபுரம் கடற்கரையில், சுமார் 3.5 அடி நீளமுள்ள ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியது. அதில் “மேட் இன் யூஎஸ்ஏ” என்று ஆங்கில எழுத்துகள் இடம்பெற்றிருந்தன. இதனால், அது ராக்கெட் வெடிகுண்டாக இருக்கலாம் என மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 28, 2025
நாகை: பாலம் அருகே கிடந்த பிணம்

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் வெட்டாற்று பாலம் அருகே நேற்று முன்தினம் மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்து அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


