News December 21, 2025
சென்னை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

சென்னை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
Similar News
News January 14, 2026
சென்னை: விரக்தியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை, கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவரது மகள் பிரியங்கா (16). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வந்தார். இந்நிலையில், அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால், பெற்றோர் பிரியங்காவை கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 14, 2026
சென்னை: இரண்டரை வயது குழந்தை பரிதாப பலி!

பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் முனீர் பாஷா- பர்வீன். தம்பதியின் இளைய மகளான இரண்டரை வயது குழந்தைக்கு சளி அதிகரித்து, சில தினங்களாக மூச்சுத்திணறலால் அவதியடைந்து வந்தார். நேற்று காலை, குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 14, 2026
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு இன்றும் வழங்கப்படும்!

சென்னையில் இன்றும் (ஜன-14) பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இதுவரை பொங்கள் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் இன்றைய தினம் அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயண்டுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


