News December 21, 2025
நீலகிரி மக்களே உடனே புகார் அளிக்கலாம்!

இந்தியாவிலேயே முதல் முறையாக மனித-விலங்கு மோதலை தவிர்கும்
வகையில் 44 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் நாடுகாணி ஜுன்பூல் தாவர மையத்தில் பதிவாகும். இதன் மூலம் வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள்
புகுந்தவுடன் அங்கு சென்று விரட்டும் பணியில் ஈடுபடுவர். மேலும் கேமராவில் சிக்காமல் புகும் விலங்குகள் குறித்து 1800 425 4363 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
Similar News
News December 23, 2025
நீலகிரியில் 75 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் கடைவீதியில், தொழிலாளர்களுக்கு எதிரான 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ (CITU) சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. எருமாடு ஏரியா கமிட்டி தலைவர் ராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட சிபிஎம் குழு உறுப்பினர் கே.ஜே. வர்கீஸ், குஞ்சு முகமது, சீனிவாசன் உள்ளிட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
News December 23, 2025
தமிழ்நாட்டில் முதல்முறையாக நீலகிரியில்!

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாட்டின் முதல் நாய் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இது உதகை மரவியல் பூங்காவில் (Arboretum) அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா ரூ.42.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பெரிய மற்றும் சிறிய நாய்களுக்கு தனித்தனி விளையாட்டு பகுதிகள் உள்ளன. நாய்கள் விளையாடுவதற்கும், பயிற்சி பெறுவதற்கும் தேவையான உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இது நாய்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருக்கும்.
News December 23, 2025
நீலகிரி: முக்கிய எண்! SAVE பண்ணுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க


