News December 21, 2025

திமுக ஆட்சியில் துயரத்தில் மக்கள்: OPS

image

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என OPS கண்டனம் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அவர்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Similar News

News December 28, 2025

பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

image

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே மூன்றாம் பருவ புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பாடநூல் கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனை பள்ளி வாரியாக பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு பள்ளிக்கும் எத்தனை புத்தகங்கள் வந்திருக்கிறது என எமிஸ் தளத்தில் உடனே அப்டேட் செய்யவும் HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 28, 2025

விஜயகாந்தின் நட்பை நினைத்து உருகிய கமல்

image

திரையில் மட்டும் அல்ல மக்கள் மனங்களில் நாயகனாக ஒளிரும் விஜயகாந்துக்கு 2-ம் ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகர் கமல் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில் ஈகை எனும் அருங்குணத்தால் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த என் விஜயகாந்தின் நட்புத் தருணங்கள் நினைவிலாடுகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.

News December 28, 2025

‘நான் இன்னும் உயிரோடு தான் இருக்கேன்’

image

சாதாரண பூனைகளை போலல்லாமல், தட்டையான தலை, தண்ணீரில் மீன் பிடிக்கும் அசாத்திய திறமை கொண்ட பூனை இனம் Flat-headed cats. சுமார் 30 ஆண்டுகளாக மனிதர்களின் கண்களில் படாமல் இருந்ததால் அழிந்து விட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில், ‘நான் இன்னும் இருக்கிறேன்’ என்பது போல, மீண்டும் தன்னை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் தெற்கு பதியில் உள்ள அடர்ந்த சதுப்பு நிலக்காடுகளில் இவை தற்போது தென்பட்டுள்ளன.

error: Content is protected !!