News December 21, 2025
இனி பெட்ரோல், டீசல் கிடையாது!

மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதை நிறுத்துமாறு ஒடிசா போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் பொது சுகாதாரத்தை நோக்கமாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லியில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
Similar News
News December 26, 2025
குமரி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

குமரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04652-227339) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News December 26, 2025
₹5-க்கு ஸ்பெஷல் மினி மீல்ஸ்

மறைந்த Ex PM வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் 45 இடங்களில் மலிவு விலை அடல் கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன. ₹5-க்கு 2 சப்பாத்தி, சாதம், பருப்பு குழம்பு, கூட்டு, ஊறுகாய் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேரின் பசி போக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. TN-ல் அம்மா உணவகம், AP-ல் அண்ணா கேன்டீன், தெலங்கானாவில் இந்திராம்மா கேன்டீன் போல டெல்லியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
காலையில் இதை செய்தால் கேன்சர் வராது!

அரை இன்ச் பச்சை மஞ்சள் + 1 நெல்லிக்காய் + இரண்டு இன்ச் அளவில் இஞ்சி துண்டு + இரண்டு மிளகு + தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும், வளர்சிதை மாற்றம் மேம்படும். கேன்சர் போன்ற கொடிய நோய்கள் உங்களை அண்டாது என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவரும் பயனடைய SHARE பண்ணுங்க.


