News December 21, 2025
மயிலாடுதுறை: பணி நியமன ஆணைகள் வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறையாரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் பூம்புகார் MLA நிவேதா முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
Similar News
News January 14, 2026
மயிலாடுதுறையில் கலைவிழா நாளை தொடக்கம்

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல கலைப்பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை (ஜன.15) கலைவிழா தொடங்குகிறது என தஞ்சை மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் ஜன.15, 16 ஆகிய தேதிகளில் மாலை 5 முதல் இரவு 9 மணிவரை நடைபெறுகிறது.
News January 14, 2026
மயிலாடுதுறை: வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்காக மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.
News January 14, 2026
மயிலாடுதுறை: 1.5 கிலோ தங்கம் திருடிய சிறுவன் கைது

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் சுஹாஷ் (48) என்பவா் தங்க நகைகளை உருக்கும் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது கடையில் பணியாற்றிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் 1.5 கிலோ நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவானாா். இதையடுத்து புகாரின் பேரில் தீவிர விசராணை மேற்கொண்ட போலீசார், தங்க நகைகளை திருடிச் சென்ற சிறுவனை வெறும் மூன்றே மணி நேரத்தில் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கைது செய்தனர்.


