News April 30, 2024
தமிழ்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஈழவேந்தன்

இலங்கை முன்னாள் எம்.பி ஈழவேந்தன் (91) வயது மூப்பால் கனடாவில் இன்று காலமானார். இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஈழவேந்தன், பிரபாகரன் தலைமையிலான ஆயுதப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்தவர். 1990களில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஈழப் பிரச்னையை புரிய வைக்க, துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்தார். 2000ஆம் ஆண்டு மத்திய அரசு, தமிழ்நாட்டில் இருந்து ஈழவேந்தனை கனடாவுக்கு நாடு கடத்தியது.
Similar News
News November 19, 2025
மாத்திரை சாப்பிடும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!

➤மாத்திரை சாப்பிட்ட உடன் படுக்க வேண்டாம் ➤ஏற்கெனவே ஒரு நோய்க்காக மாத்திரை எடுத்துக்கொண்டிருந்தால் டாக்டரிடம் அதை தெரிவியுங்கள் ➤சூடான நீரில் மருந்தை உட்கொள்ள வேண்டாம் ➤எத்தனை நாள்களுக்கு மருந்து பரிந்துரைக்கப்படுகிறதோ, அத்தனை நாள்களுக்கு மட்டுமே உட்கொள்ள வேண்டும் ➤மாத்திரையை சரியான வெப்பநிலையில் வையுங்கள் ➤சுயமருத்துவம் பார்க்கவேண்டாம். விழிப்புணர்வுக்காக SHARE THIS.
News November 19, 2025
சற்றுமுன்: தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றும், 1 அவுன்ஸ் $11 குறைந்து $4,061-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் $0.32 குறைந்து $50.64-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடந்த 5 நாள்களில் நம்மூர் சந்தையில் தங்கம் விலை சவரனுக்கு ₹4,000 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 19, 2025
RB உதயகுமாருடன் கூட்டணி பற்றி பேசவில்லை: பிரேமலதா

அதிமுக Ex அமைச்சர் RB உதயகுமாருடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். இது நட்புரீதியான சந்திப்பு மட்டுமே எனவும், அவரது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். முன்னதாக, அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக, தேமுதிக மா.செ.,க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு சந்தித்ததால் அரசியலில் கூடுதல் கவனத்தை பெற்றிருந்தது.


