News December 21, 2025
பெண்கள் Safety-க்காக போனில் இத பண்ணுங்க!

➤Phone Settings-க்கு சென்று, Emergency SOS என தேடி அதை ON செய்யுங்கள் ➤நம்பகமானவர் (உறவினர்/நண்பர்) Contact-ஐ அதில் உள்ளிடுங்கள் ➤நீங்கள் ஏதேனும் பிரச்னையில் சிக்கும்போது Power button-ஐ 3 முறை அழுத்தினாலே போதும். உங்களுடைய Live Location போலீசுக்கும், உறவினருக்கும் சென்றுவிடும். பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 22, 2026
கவர்னர் செயலால் அமைச்சர் அதிரடி முடிவு!

கவர்னர் RN ரவியின் சர்வாதிகார போக்கை கண்டிக்கும் விதமாக சென்னை பல்கலை., பட்டமளிப்பு விழாவை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்துள்ளார். இதுகுறித்து பேசுகையில், நாட்டின் உயர்கல்வியில் TN முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கவர்னர் தனது அறிக்கையில், உயர்கல்வியில் தமிழகம் தாழ்ந்து வருவதாக கூறியதையும், சட்டமன்ற மரபை மீறியதையும் கண்டித்து இந்த விழாவை புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.
News January 22, 2026
பதவியிலிருந்து உதயநிதி நீக்கப்பட வேண்டும்: BJP

தமிழ்நாட்டில் EPS தலைமையிலான கூட்டணி, ஊழல் அரசான திமுகவை வீழ்த்தும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். EPS-யுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் குடும்ப ஆட்சி மீது அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளதாகவும் சாடியுள்ளார். <<18913574>>மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும்<<>> வகையில் பேசும் உதயநிதி, அரசு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News January 22, 2026
கணவரை கொன்றுவிட்டு ஆபாச படம் பார்த்த மனைவி

‘என் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்’ என மனைவி கூற, உறவினர்களும் நம்பியுள்ளனர். ஆனால் கணவர் காதின் அருகில் இருந்த ரத்தம் சந்தேகத்தை எழுப்ப, போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. அதில், காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவி கொன்றது தெரியவந்துள்ளது. அத்துடன், கணவரின் சடலம் அருகிலேயே அமர்ந்து இரவு முழுவதும் மனைவி ஆபாச படம் பார்த்துள்ளார். ஆந்திராவில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


