News December 21, 2025
நெல்லை: வீடு புகுந்து நகை திருட்டு!

களக்காடு அருகே ஆதிச்சபேரி தெற்கு தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை அன்னமணி (77). திருமண வீட்டிற்கு சென்று திரும்பிய பின், ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி மற்றும் 3 வளையல்களை ஏழரை பவுன் நகைகளை பர்சில் வைத்துவிட்டு தோட்டத்திற்கு சென்றார். திரும்பி வந்தபோது பர்ஸ் காணாமல் போனது. வீடு புகுந்த மர்ம நபர்கள் திருடியதாக அன்னமனி புகார் அடிப்படையில், களக்காடு போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 26, 2025
நெல்லை: வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி!

பாவூர்சத்திரம் மைக்கேல் ராஜ் (38) தூத்துக்குடியில் இருந்து டூவீலரில் வந்த போது கேடிசி நகர் அருகே பேரி கார்டு மீது மோதி விபத்தில் சிக்கினார். பாளை GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இட்டேரி பகுதியை சேர்ந்த முருகன் (34) டூவீலரில் மேலப்பளையம் அருகே வாகன விபத்தில் சிக்கி, உயிரிழந்தார். அதேபோல் பாளை பகுதியை சேர்ந்த நோவா (30) டூவீலரில் இருந்து தவிறி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 26, 2025
நெல்லையில் மீண்டும் ஹெலிகாப்டர் சவாரி வாய்ப்பு

நெல்லை மாநகரை ஆகாயத்தில் பறந்து சுற்றி பார்க்கும் ஹெலிகாப்டர் சவாரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பயணித்து அனுபவித்து மகிழ்ந்தனர். இந்த ஹெலிகாப்டர் சவாரி மீண்டும் நெல்லை மக்களை மகிழ்விக்க வருகிறது. தைப்பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் நெல்லை மாநகரில் ஹெலிகாப்டர் சவாரி நிகழ்ச்சி அதிகாரிகள் அனுமதியுடன் நடைபெற உள்ளது.
News December 26, 2025
நெல்லை: ஆசிரியர் எழுத்து தேர்வு; சிஇஓ முக்கிய தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 27ம் தேதி சனிக்கிழமை 6 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
1526 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு விதிகளை தேர்வர்கள் பின்பற்ற வேண்டும் என நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.


