News December 21, 2025
தேனியில் ரூ.2 கோடிக்கு சாலை விரிவாக்க பணி

சின்னமனூர் அருகே சுக்காங்கல்பட்டி- சீப்பாலக்கோட்டை இடையே உள்ள குறுகிய சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. எனவே இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியில் சுமாா் 1.5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையை அகலப்படுத்தும் பணியில் தற்போது நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
Similar News
News December 25, 2025
தேனியில் புகையிலை விற்ற பெண் கைது

கோம்பை காவல் நிலைய போலீசார் குற்றச் தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.24) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவர் அவரது பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தேன்மொழி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 25, 2025
கௌமாரியம்மன் கோயிலில் ரூ.8.71 லட்சம் உண்டியல் காணிக்கை

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் வளாகத்தில் 12 நிரந்த உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல், கண்ணீஸ்வர முடையார் கோயிலில் இரு உண்டியல்கள் என மொத்தம் 15 உண்டியல்கள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியலில் காணிக்கையாக ரூ.8.71 லட்சம், தங்கம் 26 கிராம், வெள்ளி 15 கிராம் இருந்தன. கடந்த செப்டம்பரில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.
News December 25, 2025
தேனி: மதுபோதையில் பெண்ணை தாக்கிய இருவர் கைது!

பெரியகுளம் கீழ வடகரை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது குடும்பத்தினருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் கருப்பசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கருப்பசாமி மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் மது போதையில் மகேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரில் பெரியகுளம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.


