News December 21, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை., NO EXAM

தூத்துக்குடி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
Similar News
News December 25, 2025
தூத்துக்குடி: மாடு வளர்ப்பவர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 2025-2026-ஆம் ஆண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 1,10,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும்பணி 29.12.2025 முதல் 28.01.2026 வரை கால்நடை பராமரிப்புத்துறையின் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
தூத்துக்குடி: மாடு குறுக்கே வந்ததால் பறிபோன உயிர்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிலை மோடி நகர் பகுதியில் மாடு குறுக்கே வந்ததில் கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பு செயலாளர் பென்சிகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
BREAKING தூத்துக்குடி: முத்து நகர் ரயில் நேரம் மாற்றம்

தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் அதிவேக விரைவு இரயில் நேரம் வருகிற ஜன.1ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 8:40மணிக்கு பதில் 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் இரவு 9:05 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 6:23 மணிக்கு தாம்பரம் செல்லும், காலை 7:35 மணிக்கு எழும்பூர் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. *SHARE


