News December 21, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

வீட்டிலிருந்தே சமூக வலைதளங்கள் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க், மெசேஜ் வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
Similar News
News January 15, 2026
புதுவை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

புதுவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 15, 2026
புதுச்சேரி: போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

புதுவையில் சார்லஸ் மார்ட்டின் எல்ஜேகே என்ற புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து, தேர்தல் அரசியல் பணிகளை செய்து வருகிறார். அவரது கட்சியில் பலரும் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அவரை சீண்டுவது போல முதல்வர் ரங்கசாமி ஆதரவாளர்களின் சார்பில் “லாட்டரி விற்பனைக்கு அரசு அனுமதி வேண்டுவோர், ஆட்சிக்கு வர நினைப்போர் உள்ளே அனுமதி இல்லை” என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 15, 2026
புதுச்சேரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்கு RTO அலுவலகம் செல்லா வேண்டாம். இந்த <


