News December 21, 2025
புதுகை: மருத்துவர் வீட்டில் 21 பவுன் நகை திருட்டு

புதுகை மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (பல் மருத்துவர்). இவரது மனைவி வெள்ளிக்கிழமை இரவு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சை நிலையத்தில் மருத்துவர் இருந்த நேரத்தில் மேல்தளத்தில் உள்ள மருத்துவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் உள்ளே பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுகை நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
புதுகை: மு. ஊராட்சி மன்ற தலைவர் கைது – ரூ.10 லட்சம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி அருகே சட்டவிரோதமாக சிலர் சூதாடுவதாக அறந்தாங்கி போலீஸ் டிஎஸ்பி சரவணனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய கிருஷ்ணாஜிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாகுல்ஹமீது உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்து, சூதாட வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
News December 28, 2025
புதுக்கோட்டை: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

புதுக்கோட்டை மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், <
News December 28, 2025
புதுக்கோட்டையில் நாளை மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அழியாநிலை, அரிமளம், தல்லாம்பட்டி, மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(டிச.29) பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ள உள்ளனர். இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட மன் நிலைங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து இடங்களிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


