News December 21, 2025
திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.22) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, தாமரைப்பட்டி, வேல்வார்கோட்டை, முத்தனங்கோட்டை, பாளையம், அணியாப்பூர், குஜிலியம்பாறை வடக்கு, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, அய்யன்கோட்டை, நத்தம், வேலம்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, சேத்தூர், எரியோடு, நாகையகோட்டை, வெல்லம்பட்டி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News December 24, 2025
இருளில் மூழ்கிய திண்டுக்கல்!

திண்டுக்கல் பஸ் ஸ்டாடண்ட், முக்கிய ரோடுகளை தவிர புறநகர் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் போதிய தெரு விளக்குகள் இல்லாத நிலை நீண்ட நாட்களாக தொடர்கிறது. குறிப்பாக சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி என பல இடங்களில் தெரு விளக்கு வசதிகள் போதிய அளவில் இல்லை என கூறப்படுகிறது. விளக்குகள் அமைத்து போதிய வழிகாட்டல் பலகைகள் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
News December 24, 2025
வேடச்சந்தூர் அருகே விபத்து

கல்வார்பட்டி ஊராட்சி ரங்கநாதபுரம் விவசாயி சுப்பிரமணி (70). திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள எத்திலாம்பட்டி சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக பைக்கில் சென்றார். கரூர்-திண்டுக்கல் ரோடு தனியார் ஓட்டல் முன்பு சாலையை கடக்கும் போது பின்னால் வந்த கார் மோதி சுப்பிரமணி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 24, 2025
திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)


