News December 21, 2025

சாதி, மத உணர்வுகளை தூண்டுவது ஆபத்தானது: திருமா

image

மதுரையை சனாதன மையமாக மாற்ற பார்ப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், சனாதன எதிர்ப்பே உண்மையான தமிழ் தேசியம் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனநாயக உணர்வை சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக சாதி, மத உணர்வுகளை தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News January 12, 2026

சென்சார் போர்டின் Brand Ambassador நான் தான்: ஜீவா

image

‘ஜன நாயகன்’ படம் சென்சார் பிரச்னையால் தள்ளிப்போனதால், ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ஜன.15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், புரோமோஷன் விழாவில் சென்சார் போர்டு தொடர்பாக ஜீவாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தான் நடித்த ஜிப்ஸி திரைப்படத்திற்கு 48 கட் கொடுத்ததாகவும், சென்சார் போர்டின் Brand Ambassador நான் தான் என கலகலப்பாக பதிலளித்தார்.

News January 12, 2026

அண்ணாமலை போட்டியிடப் போகும் தொகுதி இதுவா?

image

2024 தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோற்றார் அண்ணாமலை. இருப்பினும், மற்ற மாவட்டங்களை விட கோவையில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதால் அப்பகுதியிலேயே வரும் தேர்தலில் அவரை களமிறக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதன்படி, கோவை சிங்காநல்லூர் (அ) வடக்கு தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க ஆலோசனை நடப்பதாக பேசப்படுகிறது. இதை தவிர காங்கேயத்திலும் களமிறங்க வாய்ப்பு என கூறப்படுகிறது.

News January 12, 2026

முன்னாள் முதல்வர், கவர்னரின் மனைவி காலமானார்

image

ஆந்திராவின் EX CM, TN EX கவர்னர் ரோசய்யாவின் மனைவி சிவலட்சுமி(86) உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2011 முதல் 2016 வரை ரோசய்யா TN கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!