News December 21, 2025

மதுரை: மன அழுத்தத்தில் தோட்டத்தில் இளைஞர் தற்கொலை

image

மதுரை வாகைகுளத்தை சேர்ந்தவர் காசி தேவர் மகன் சுப்பிரமணி(32). திருமணமகாத இவர் மது போதைக்கு அடிமையாக, வீட்டில் அதை கண்டித்துள்ளனர். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், நேற்று சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான கீழப்பனங்காடி விவசாய தோட்டத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 27, 2025

மதுரை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 27, 2025

மதுரை: சாணி பவுடர் குடித்து துடிதுடித்து பலி

image

திருவாதவூர் அருகே சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருகன்(48). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனாட்சி மதுரையில் உள்ள அப்பளம் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மனைவி வேலைக்கு சென்றதும் முருகன் நேற்று முன்தினம் சாணி பவுடரை குடித்து மயங்கி விழ, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க, அங்கு அவர் பலியானார்; காரணம் குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 27, 2025

மதுரையில் 70 பேருக்கு மறுவாழ்வு

image

மதுரை அரசு மருத்துவமனையில், கடந்த 11மாதங்களில் மூளைச்சாவு அடைந்த (மோகன் குமார், வினோத், பெருமாள், கோச்சடை முத்தையா, சபரீஷ், ஆனந்த போதிகுமரன், முனியாண்டி, ஹரிதேவி, ஈஸ்வரன், முருகேஸ்வரி, தேவமனோகரி மற்றும் சேகர்) ஆகிய 12 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறுநீரகம் 22 பேர், கல்லீரல் 10 பேர், இதயம் & நுரையீரல் தலா 2 பேர் என மொத்தம் 70க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

error: Content is protected !!