News December 21, 2025

திருச்சி: ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

image

திண்டுக்கல் மாவட்டம் சாமியார் தோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (45). அரசு பஸ் நடத்துனரான இவர் நேற்று திருச்சி வந்த பஸ்சில் பணியில் இருந்துள்ளார். அப்போது பஸ் தீரன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது சிவக்குமார் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 24, 2025

திருச்சி: கல்லூரி மாணவி தற்கொலை

image

திருவெறும்பூர் அருகே வேங்கூர் பகுதியை சேர்ந்தவர்  தீப ரோஷினி (19). இவர்  தனியார் கல்லூரியில் பி.டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது தாய் வெளியே சென்று இருந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் உடலை கைப்பற்றி, தாய் ஜானகி அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News December 24, 2025

திருச்சி: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

image

திருச்சி மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், திருச்சி மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள<> இங்கே க்ளிக் <<>>செய்யவும். ஷேர்!

News December 24, 2025

பட்டா வழங்கல்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தில்” விண்ணப்பிக்க https://tamilnilam.tn.gov.in/citizen என்ற தளத்தை பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். விண்ணப்பித்தவர்களுக்கு இணைய வழியில் நத்தம் பட்டா வழங்கப்படும். இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்டல் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!