News April 30, 2024
நகராட்சி மார்க்கெட் கடைகளுக்கு விடுமுறை

ஊட்டி அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ள தகவல்: மதுரையில் 41வது வணிகர் மாநாடு மற்றும் பேரணி மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. அறைய தினம் உதகை மார்க்கெட் கடைகளுக்கு காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை விடுமுறை விடப்படுகிறது. மேலும் 4ஆம் தேதி இரவு 10 மணி வரை கடைகள் திறந்திருக்கும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News January 14, 2026
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள்!

பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பழைய பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழை துணிகள், ரப்பர், டயர் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்தவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், காற்றின் தரத்தை பாதுகாத்திட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News January 14, 2026
நீலகிரி: போஸ்ட் ஆபிஸ் வேலை

நீலகிரி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் நாளை ஜன.15-க்கு பிறகு <
News January 14, 2026
குன்னூரில் இப்பகுதியில் செல்ல தடை

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் குன்னூர் – வெலிங்டன் இடையே உள்ள முக்கிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.


