News December 21, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.20) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 1, 2026
வேலூர் மக்களுக்கு மாவட்ட எஸ்.பி புத்தாண்டு வாழ்த்து

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், வேலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தனது இனிய 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “இந்த 2026-ஆம் ஆண்டில் பொதுமக்கள் அனைவரும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
News January 1, 2026
வேலூர்: ஓய்வூதியர்கள் குறைதீர்வு கூட்டம் – கலெக்டர் தகவல்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 23-ம் தேதி கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து ஓய்வூதியர்கள், ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை வரும் 9-ம் தேதிக்குள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அலுவலகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
வேலூர் முழுவதும் 28,520 கால்நடைகளுக்கு தடுப்பூசி

வேலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 28 ஆயிரத்து 520 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. வருகிற 18-ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமை கால்நடை உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கால்நடைத்துறை இணை இயக்குனர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.


