News April 30, 2024

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சந்தையில் மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 4, 2026

TNPSC குரூப் 4 கலந்தாய்வு தேதி வெளியானது

image

TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பிப்.24, 25-ல் 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூலச்சான்று சரிபார்ப்பு நாள் & விவரங்களை www.tnpsc.gov.in-ல் காணலாம். இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஆனால், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் தேர்வு செய்யப்படுவர் என உறுதி தர இயலாது எனவும் TNPSC விளக்கமளித்துள்ளது.

News February 4, 2026

முடி உதிர்வை உடனடியாக நிறுத்த சிம்பிள் டிப்

image

டென்ஷனால் முடி கொட்டுதா? முடி கொட்டுறதுனாலயே இன்னும் அதிகமா டென்ஷன் ஆகுறீங்களா? முடி உதிர்வை உடனடியா குறைக்க இந்த ஹேர்பேக்கை Try பண்ணுங்க. ▶ 2 ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துக்கொள்ளுங்கள் ▶ அத்துடன் அரைத்த வெங்காய ஜூஸை மிக்ஸ் செய்ய வேண்டும் ▶தலைமுடியின் வேர் முதல் நுனி வரை இதனை அப்ளை செய்து 1 மணி நேரம் ஊறவிடுங்கள். ▶வாரத்திற்கு 2 முறை இதை செய்யுங்க. SHARE.

News February 4, 2026

வார விடுமுறை 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்!

image

சனி, ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிப். 6,7,8 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், பல்வேறு நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 2 நாள் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர் <>http://tnstc.in<<>>-ல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!