News April 30, 2024
வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த இளைஞர் கைது!

தேனி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சின்னமனூரில் உள்ள கம்மவார் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பையும் மீறி, ராஜேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் நுழைய முயன்றுள்ளார். இதனையடுத்து, அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக TTV தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 31, 2026
4,00,000,000,000 ரூபாய் மோசடி.. சற்றுமுன் ED அதிரடி கைது

40 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்(RCOM) நிறுவனத்தின் Ex தலைவர் புனித் கார்க்கை ED அதிரடியாக கைது செய்துள்ளது. ED அறிக்கையின்படி 2001 – 2025 வரை RCOM-ன் முக்கிய பொறுப்புகளிலிருந்த புனித் கார்க், சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் புனித் கார்கேவின் 11 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
News January 31, 2026
ரஷ்ய பெண்களுடன் உறவு.. பில் கேட்ஸுக்கு பாலியல் நோயா?

சமீபத்தில் வெளியான<<19008416>> எப்ஸ்டீனின் ஆவணங்களில்<<>> பில் கேட்ஸ் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய பெண்களுடன் பில்கேட்ஸ் படுக்கையை பகிர்ந்ததால், அவருக்கு பாலியல் ரீதியான நோய் ஏற்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைக்க அவரது மனைவிக்கு ஆன்டிபயாட்டிக்கை அவர் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை கேட்ஸ் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.
News January 31, 2026
FLASH: 34 பேருடன் களமிறங்கும் விஜய்.. தவெக அறிவித்தது

CTR நிர்மல்குமார் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்பு குழுவை தவெக அமைத்துள்ளது. இதில், அக்கட்சியின் பொருளாளர் வெங்கடரமணன், அறிவழகன், சத்யகுமார், தன்ராஜ் உள்ளிட்ட 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி பெறுவதுடன், பிரசார கூட்டங்களுக்கு சட்ட ரீதியாக வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள உள்ளதாம்.


