News December 21, 2025

தூத்துக்குடி: 8.53 மெட்ரிக் டன் நெல் விதை கையிருப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளதாவது -மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் நலன் கருதி, நெல் விதை 8.53 மெட்ரிக் டன் உளுந்து 101.83 மெட்ரிக் டன்னும், கம்பு 16.65 மெட்ரிக் டன்னும், சூரியகாந்தி 7.68 மெட்ரிக் டன்னும், பாசிப்பயிறு 5. 058 மெட்ரிக் டன், சோளம் 3.72 மெட்ரிக் டன், பருத்தி ஒரு மெட்ரிக் டன், இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News December 29, 2025

தூத்துக்குடி: பஸ் மோதி சம்பவ இடத்தில் பரிதாப பலி!

image

ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த முனியசாமி (36) நேற்று கங்கைகொண்டான் சிப்காட் அருகே ஆலடிப்பட்டியில் இருந்து டூவீலரில் சென்றனர். அப்போது குமரியிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ், பைக் மீது மோதியது. இதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற உலகநாதன் படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை.

News December 29, 2025

தூத்துக்குடி: SIR 2025 பட்டியல் வெளியீடு – CLICK பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, SIR 2025 வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கான்னு தெரியலையா? அதை பார்க்க நீங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ள தேவை இல்லை. நீங்களை பார்க்க வழி இருக்கு
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து வாக்காளர் எண் பதிவு பண்ணுங்க..
2. மாவட்டத்தை தேர்வு பண்ணுங்க.
உங்க பெயர் வந்தது என்றால் உங்க பெயர் வாக்களார் பட்டியலில் சேர்க்கபட்டுவிட்டது என அர்த்தம். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News December 29, 2025

தூத்துக்குடி: அரிவாளால் வெட்ட முயற்சி – ஒருவருக்கு வலைவீச்சு

image

குரும்பூர் பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் கருப்பசாமிக்கு பைக் மோதலால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன் தனது சகோதரர் ஆறுமுக நயினாரை அழைத்துள்ளார். அங்கு வந்த ஆறுமுகம் கருப்பசாமியை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பாசாமி இருவரையும் அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளார். இருவரும் கூச்சலிட கருப்பசாமி அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்து குரும்பூர் போலீசார் விசாரனை.

error: Content is protected !!