News December 21, 2025
கஞ்சா சாக்லேட் விற்ற நபர் கைது

ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக ஆர்.எஸ்.புரம் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு கஞ்சா சாக்லேட் விற்பனை ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ச்சன பிரியா (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 232 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 25, 2025
JUSTIN: மதுக்கரை அருகே பெண் கொலை?

கோவை மதுக்கரை அடுத்துள்ள திருமலையாம்பாளையம் கல்லுக்குழியில், பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் யார்? எந்த ஊரைச சேர்ந்தவர்? என தெரியவில்லை. கையில் ரமேஷ், எஸ்ஆர்ஆர் எனவும் பச்சை குத்தப்பட்டுள்ளது தெரிந்தது.
News December 25, 2025
கோவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 25, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எஸ்.எஸ். தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ் கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் கலெக்டரேட் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) மற்றும் புளியகுளம் சாலை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்
ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


