News December 21, 2025

₹4 கோடி தராமல் இழுத்தடித்த தயாரிப்பாளர் மீது SK வழக்கு

image

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடிக்க ₹15 கோடி சம்பளம் பேசிவிட்டு, ₹11 கோடி மட்டும் கொடுத்து ₹4 கோடியை தராமல் இழுத்தடிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வரும் வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே கடன் பிரச்னையால் <<18539007>>‘வா வாத்தியார்’<<>> படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் ஞானவேல் ராஜா தவிக்கிறார்.

Similar News

News December 22, 2025

40 வருடங்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்த காதல்!

image

அமெரிக்காவில் கெவின்-டெபி ஜோடியின் பள்ளி பருவ காதல் பலரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. டீனேஜ் வயதில் டெபி கர்ப்பமாகி விட, வாழ்க்கைச் சூழலால் இருவரும் பிரிந்தனர். டெபிக்கு பிறந்த பெண் குழந்தையான ’வால்’ தத்துக்கொடுக்கப்பட்டார். இப்படி வாழ்க்கையே தனிதனித்தீவான சூழலில் டெபியின் குழந்தைகளால் 40 வருடங்களுக்கு பிறகு கெவின், டெவின், வால் மூவரும் ஒரே குடும்பமாய் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர்.

News December 22, 2025

விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (PHOTOS)

image

தவெக சார்பாக இன்று மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜய், குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். இந்த விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற 1000-க்கும் மேற்பட்டோருக்கு ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் கிப்டுகள் வழங்கப்பட்டன. மேலே, விழாவின் போட்டோக்களை, உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.

News December 22, 2025

திமுக தேர்தல் அறிக்கை.. கனிமொழி கொடுத்த ஹிண்ட்

image

தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என MP கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் மகளிர் உரிமை, மாநில உரிமை, விவசாயிகளின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையின் மையக் கருத்தாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று அறிவாலயத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!