News December 20, 2025

சவுதியில் முதல்முறையாக பனிப்பொழிவு.. PHOTOS

image

சவுதி அரேபியாவில் பனிப்பொழிவா? இது உலக மக்கள் மட்டுமின்றி சவுதி மக்களையும் வியப்படைய வைத்துள்ளது. ஹாயில் & தபுக் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவால், வரலாற்றில் முதல் முறையாக பாலைவனம், பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. பனிப்போர்வை போர்த்திய சவுதி அரேபியாவின் அழகிய போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

Similar News

News December 26, 2025

FLASH: தவெகவில் விஜய் எடுத்த புதிய முடிவு

image

தவெகவில் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது விஜய்க்கு புது தலைவலியை கொடுத்துள்ளது. இந்நிலையில், மா.செ.,க்களை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மா.செ.,க்கள் தாங்கள் தினமும் மேற்கொள்ளும் பணிகளை மா.பொ.,க்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமாம். இதற்காக வருவாய் மாவட்ட வாரியாக மா.பொ.,க்கள் நியமிக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News December 26, 2025

REWIND: சுனாமி பேரலை 8,000 தமிழர்களை கொன்ற நாள்!

image

ஆழிப்பேரலை(Tsunami) கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்த துயரத்தின் 21-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2004-ம் ஆண்டு இதே நாளில் கடற்கரை ஓரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்கள் உள்பட 7,993 பேர் உயிரிழந்தனர். தாய், தந்தை, மனைவி, அக்கா, தம்பி, பிள்ளைகள் என உறவுகளை இழந்தவர்கள் இன்னும் அந்த துயரிலிருந்து மீளாமல் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

News December 26, 2025

சகல சௌபாக்கியம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு!

image

வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் உள்ள மகாலட்சுமிக்கு, அபிஷேகத்திற்குத் தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். ➤பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட, செல்வம் பெருகும் ➤சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழால் அர்ச்சனை செய்ய தனலாபம் கிடைக்கும் ➤மாலையில், சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் விலகிவிடும். SHARE IT.

error: Content is protected !!