News December 20, 2025
நாகூர் ஹனிபாவிற்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

நாகையில், இன்று நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, திராவிட இயக்க கொள்கைகளை கேட்போரை ஈர்க்கும் பாடலாக, தன் கம்பீர குரலால் பொதுமக்களின் உள்ளங்களில் கொள்கை உணர்வையும், உற்சாகத்தையும் ஒரு சேர ஊட்டி, மதங்களை தாண்டி மனங்களை இணைத்த மனிதநேய பண்பாளர் அய்யா நாகூர் ஹனிபா என புகழாரம் சூட்டினார்.
Similar News
News December 24, 2025
நாகையில் 10 பெண்கள் உள்பட 48 பேர் கைது!

தொழிலாளர்ளுக்கு விரோதமாக இருப்பதாக கூறி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று நாகை நீதிமன்றம் அருகே சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
News December 24, 2025
நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் (AABCS) திட்டத்தின் கீழ் எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்த புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதி அவசியமில்லை. மேலும், மொத்த தொகையில் 35% வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 24, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.23) இரவு 10 மணி முதல் இன்று (டிச.24) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


