News December 20, 2025
நாமக்கல் : முட்டை விலை 5 பைசா உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 20) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 630 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
Similar News
News December 28, 2025
நாமக்கல் மக்களே மிக முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழிலை மேம்படுத்திட குறைந்தவட்டி விகிதத்தில் 2 விதமான கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே நாமக்கல் மாவட்டத்தில், சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் https://tamco.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News December 28, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கலில் இருந்து நாளை ( டிசம்பர்.29 ) திங்கள் அதிகாலை 4:20am மணிக்கு 07356 ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயிலில் ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம்.
News December 28, 2025
நாமக்கல்: பதிவு செய்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும்!

CMன் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். இதை SHARE பண்ணுங்க!


