News December 20, 2025
தனியார் பள்ளிகளில் வரும் மாற்றம்.. அரசு புதிய அறிவிப்பு

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கி மூலம் பாடல்களை ஒலிப்பரப்பக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால் திங்கள் முதல் இது நடைமுறைக்கு வரும் என வாய்ப்புள்ளது.
Similar News
News December 27, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்!

தங்கம் விலை இன்று(டிச.27) 22 கேரட் 1 கிராம் ₹110 உயர்ந்து ₹13,000-ஐ தொட்டுள்ளது. சவரனுக்கு ₹880 உயர்ந்து ஒரு சவரன் ₹1,04,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை <<18681773>>சர்வதேச சந்தையில்<<>> ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் இந்திய சந்தையில் கடந்த 6 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,800 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
காலை 11 மணிக்கு கூடுகிறது நாதக பொதுக்குழு!

சீமான் தலைமையில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் ஆண்டு கணக்கு, 2026 தேர்தல் வேட்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அதேபோல், கட்சியிலிருந்து அண்மை காலமாக பல முக்கிய முகங்கள் வெளியேறிய நிலையில், அவர்கள் வகித்த பதவிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் சீமான் இக்கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 27, 2025
புதிய 500 ரூபாய் நோட்டு.. வந்தது வார்னிங்

ATM மெஷினுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போலி 500 ரூபாய் நோட்டுகளை தயாரித்த மளிகை கடைக்காரர் ராஜேந்திரன் போலீசில் சிக்கியுள்ளார். திருப்பூர், ஆண்டிபாளையத்தில் தனியார் வங்கி ATM-ல் 12 நோட்டுகளை(₹500) ஒருவர் டெபாசிட் செய்துள்ளார். இதை கண்டுபிடித்த மேலாளர் போலீசிடம் புகார் அளிக்க விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ATM மெஷினையே ஏமாற்றும் வகையில் போலி ₹500 நோட்டுகள் இருப்பதால் மக்கள் உஷாராக இருங்க.


