News December 20, 2025
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்து சேவை செய்தவர்களுக்கு “அவ்வையார் விருது” மார்ச் 8 அன்று வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற தகுதி உடையவர்கள் https://awards.tn.giv.in என்ற இணையதளத்தின் வாயிலாக 31.12.2025-க்குள் பதிவு செய்து வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இணையத்தில் பதிவு செய்த ஆவணங்கள் கையேடாக மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜன.3க்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News December 27, 2025
தேனியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்!

வடுகபட்டி பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (27). இவர் சுரேஷ் என்பவரது காய்கறி கடையில் காய் வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விருமாண்டி, இவரது நண்பர் பாண்டி செல்வம் ஆகியோர் மகாலட்சுமி வாங்கிய காய்கறிகளை எடுத்துள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமிக்கு கேட்டதற்கு அவரை அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து தென்கரை போலீசார் விருமாண்டி, பாண்டிசெல்வத்தை கைது (டிச.26) செய்தனர்.
News December 27, 2025
தேனி: துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது!

போடி அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (62). சூலப்புரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (29). இவர்கள் இருவரும் நேற்று (டிச.26) போடி, கொட்டகுடி காப்புக்காடு வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அவர்களை கைது செய்து ஒரு நாட்டுதுப்பாக்கி, 2 தோட்டாக்கள், கத்தி, மண்வெட்டி, அரிவாள், டூவீலர், அலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News December 27, 2025
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

தேனி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை சார்பில் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த கல்வியாண்டில் வட்டாரம் வாரியாக ஒரு பள்ளியை தேர்வு செய்து ஜன.6 முதல் ஜன.29 வரை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


