News December 20, 2025
நெல்லை: வாக்காளர்கள் நீக்கம் விவரம் தெரிந்துகொள்ள CLICK!

நெல்லை மாவட்டத்தில், சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் விவரம் நேற்று (டிச 19) மாலை வெளியிடப்பட்டது. SIRக்கு முன் வாக்காளர் எண்ணிக்கை 14,18,325. SIRக்கு பின் வாக்களர் எண்ணிக்கை 1,203,368. நீக்கப்பட்ட வாக்காளர் எண்னிக்கை 2,14,957. நெல்லையில் 15.16 சதவீத வாக்களர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து அறிய <
Similar News
News December 27, 2025
நெல்லை: போலீசாரை வெட்ட முயற்சி; இருவருக்கு வலைவீச்சு

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ரோந்து சென்ற போலீசார், நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய சுரேஷ், ஐயப்பன் ஆகியோரைப் பிடிக்க முயன்றனர். போலீசாரை அவதூறாக பேசிய இருவரும் அரிவாளால் வெட்ட முயன்று தப்பி ஓடினர். சப்-இன்ஸ்பெக்டர் கணபதி புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த களக்காடு போலீசார், ரவுடி சுரேஷ் உட்பட இருவரையும் தேடி வருகின்றனர்.
News December 27, 2025
நெல்லை: போலீசாரை தாக்கிய இருவர் கைது

பாளை தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் தலைமையில் காவலர் கார்த்திக் ராஜா, அரியகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நொச்சிகுளம் பாலசுந்தர் என்பவர் வந்த ஆட்டோவை நிறுத்திய போது காவலர் கார்த்திக் ராஜாவை தனது தந்தை சகோதரருடன் சேர்ந்து தாக்கினார் இது குறித்து போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து பாலசுந்தர் அவரது சகோதரர் கனகராஜை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
News December 27, 2025
நெல்லை: ரூ.3 லட்சத்தில் RBI வேலை

நெல்லை மக்களே; இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு ‘சி’ ஒப்பந்த அடிப்படையில் 77 காலியிடங்களுக்கு (ஐடி, வளாகம், மேற்பார்வை துறைகள்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிஇ/பிடெக், எம்பிஏ, சிஏ உள்ளிட்ட தகுதி மற்றும் அனுபவம் அவசியம். 21 – 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு சம்பளம் ரூ.3.10 – 6 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.01.2026 வரை. விண்ணப்பிக்க<


