News December 20, 2025

ஆத்தூர்: மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி

image

ஆத்தூரைச் சேர்ந்தவர் செல்லப்பன் (70). இவர் ஆணைகல்மேட்டில் உள்ள ஏரியில் பழைய பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்தார். அப்போது தீ வைத்து எரிந்து கொண்டிருந்த பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை எடுக்க முயன்றார். அப்போது மர்ம பொருள் வெடித்து, செல்லப்பன் மீது கண்ணாடி துகள்கள் சிதறியதோடு, தீப்பற்றியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தார்.

Similar News

News December 29, 2025

ஏற்காடு: 600 அடி பள்ளத்தில் பெண் சடலம்!

image

ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் சுமார் 600 அடி ஆழமான பள்ளத்தில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் . இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 29, 2025

சேலம்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

image

சேலம் மக்களே, ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News December 29, 2025

சேலம்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

image

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். யாருக்காவது உதவும் இதை அதிகம் ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!