News April 30, 2024
நீலகிரி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 29, 2025
நீலகிரியில் அழியும் அபாயம்!

நீலகிரியில் பரவலாக காணப்பட்ட அரிய வகை கருமந்திகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை, கூடலுார் ஓவேலி, குண்டம்புழா, நாடுகாணி மற்றும் நடுவட்டம் பகுதிகளில் குறிப்பிட்ட சில வனங்களில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. இதன் இறைச்சி, மருத்துவ குணம் கொண்டதாக கூறி, வேட்டையாடி வருவதாலும், காடுகள் அழிக்கபட்டதாலும், இங்கும் இதன் எண்ணிக்கை குறைந்து இனமே அழியும் அபாயத்தில் உள்ளது என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
News December 29, 2025
நீலகிரி: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்! DON’T SKIP

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த <
News December 29, 2025
நீலகிரி: விடுமுறை அறிவிப்பு!

நீலகிரியில் படுக இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (7.01.2025) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.


