News December 20, 2025

பெரம்பலூர்: மின் வேலியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

image

தேவையூர் அருகே உள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்(63). இவர் பெரியசாமி(60) என்பவர் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது பெரியசாமி தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிரை பாதுகாக்க அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி சுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 21, 2025

பெரம்பலூரில் நடைபெற்று இலவச கண் பரிசோதனை முகாம்

image

பெரம்பலூர் நகரில் இன்று (டிச.21) காலை 8-1 மணி வரை பெரம்பலூர் – எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம், பெரம்பலூர் டவுன் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

News December 21, 2025

பெரம்பலூர்: அம்மனுக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை

image

பெரம்பலூர் சங்குபேட்டையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மார்கழி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வன்ன மலர்களால் அலங்கரித்து, மாலை அணிவித்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

News December 21, 2025

பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <>eservices<<>>.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!