News December 20, 2025
புதுவை: கூலி தொழிலாளி ஏரியில் மூழ்கி இறப்பு

பி.எஸ்.பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி அய்யனார்(59). சம்பவத்தன்று இவர் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது, ஏரியில் மூழ்கியுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மற்றும் சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சையில் இருந்த அய்யனார் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
புதுச்சேரி: ரூ.2,50,000 சம்பளத்தில் அரசு வேலை

தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA-ராணுவம், கடற்படை, விமானப்படை) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 21
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,50,000
5. கல்வித் தகுதி: 10th, 12th
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகையில் முதலமைச்சர்

புதுச்சேரி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில், இன்று காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். திருப்பலிக்கு பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். பின்னர், இருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்களும் முதலமைச்சருக்கு ஆசீர்வாதம் வழங்கினர். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
News December 25, 2025
புதுவை: பொங்கலுக்குள் பல்வேறு திட்டம்!

“தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரை சுமார் 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்பி உள்ளோம். பொங்கலுக்குள் இடைநிலை ஆசிரியர்கள், 256 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். மாணவர்களுக்கான லேப்-டாப் பொங்கலுக்குள் வழங்கப்படும். கல் வீடு கட்டும் திட்டத்துக்கு 1700 பேருக்கு பொங்கலுக்குள் முதல் தவணைத் தொகை தரப்படும். மத்திய அரசு நமக்கு கூடுதல் நிதியை தரவுள்ளது.” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


