News December 20, 2025

தவெக உடன் கூட்டணி அமைக்க காங்., விருப்பம்: நாஞ்சில்

image

காங்கிரஸை போல சில கட்சிகளுக்கு தவெகவுடன் கூட்டணி சேர ஆசை இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். இதுபற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற அவர், யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை அரவணைக்க விஜய் தயாராக இருக்கிறார் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் கூட்டணி பலமாக இருப்பதாக திமுக கூறிவரும் சூழலில், காங்கிரசுக்கு இப்படியொரு ஆசை இருப்பதாக நாஞ்சில் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 28, 2025

இதை சாப்பிட்டா HEART ATTACK வரும்… எச்சரிக்கை!

image

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வகை உணவுகளால் இதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஹோட்டல்களில் 60% அளவுக்கு, எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதாம். டெல்லி, மும்பை, கொல்கத்தாவுடன் ஒப்பிடுகையில் சென்னை பரவாயில்லையாம். எனினும், வடை, பஜ்ஜி, போண்டா, சில்லி சிக்கன் சாப்பிடு முன் யோசிக்கவும்.

News December 28, 2025

தாயின் சடலத்துடன் 20 நாள்கள் வாழ்ந்த இளைஞர்!

image

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில், தாயாருடன் வசித்து வந்தவர் பிரவீன் கால்கோ. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தாய்க்கு, வீட்டிலேயே சிகிச்சை பார்த்து வர, திடீரென உயிரிழந்துள்ளார். தாயின் பிரிவை தாங்க முடியாமல், அதிர்ச்சியில் கடும் மன அழுத்தத்திற்கு சென்ற அவர், 20 நாள்களாக தாயின் சடலத்துடன் ஒரே அறையில் வசித்துள்ளார். உடல் அழுகி, துர்நாற்றம் வீசிய பிறகே இந்த துயர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

News December 28, 2025

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்

image

உலக புகழ்பெற்ற நடிகை பிரிகிட் பார்டோட் (91) வயது முதிர்வு காரணமாக காலமானார். 1956-ல் வெளியான ‘And God Created Woman’ படத்தின் மூலம் உலக புகழ் பெற்றார். பல உயரிய விருதுகளை பெற்றுள்ள இவர், தனது 39-வது வயதில் நடிப்பில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலராக பணியை தொடங்கிய பிரிகிட், மத சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் கருத்துக்களால் சர்ச்சையிலும் சிக்கினார்.

error: Content is protected !!