News April 30, 2024
திருவள்ளூர்: வெயில் உயிரை பறித்த கொடுமை

மாதவரம் தபால் பெட்டி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மதியம் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் கோடை வெப்பம் தாளாமல் திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு சாலையோரம் கொண்டு வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
Similar News
News March 13, 2026
திருவள்ளூர் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
News March 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்தொடர்பான குறைதீர் முகாம் நாளை(மார்ச் 14) மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் இருந்தால் கலந்துகொண்டு பயனடையலாம். மேலும், வரும் 25ஆம் தேதிக்குள் கை விரல் ரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
திருவள்ளூரில் இளைஞர் துடிதுடித்து பலி

பொதட்டூர்பேட்டை அடுத்த கோண சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்தனன், இவருடைய மகன் சரவணவேல்(17). இவர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நண்பருடன் பைக்கில் செல்லும்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ மோதி பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொதட்டூர்பேட்டை போலீசார் நேற்று(மார்ச் 12) வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


