News April 30, 2024
சேலத்தில் மண்பானை விற்பனை அதிகரிப்பு

கோடை காலத்தில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக சேலத்தில் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. மண் பானை தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. பானை ரூ.200 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது. பைப் பொருத்தப்பட்ட மண்பானை ரூ.300 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள், வியாபாரிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
Similar News
News November 8, 2025
சேலம்: பிளஸ்-2 மாணவிக்கு இன்ஸ்டாவில் தொல்லை!

சேலம் சூரமங்கலம் அருகே காசக்காரனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37), இவர் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
சேலம் கோட்டத்தில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள்!

சேலம் மாவட்டத்தில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் நேற்று முதல் வருகிற 10-ம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு மையம் மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.
News November 8, 2025
இளம்பிள்ளையில் சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்!

சேலம் இளம்பிள்ளை அருகே, காந்திநகர் பகுதியில் வசித்து வந்த பெரியண்ணன் (80) மற்றும் அவரது மனைவி பாக்கியம் (70) இருவரும் மகனுடன் வசித்து வந்தனர். வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நேற்று முன்தினம் மாலை பாக்கியம் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், மனைவியை இழந்த துக்கம் தாங்க முடியாமல் கணவர் பெரியண்ணனும் உயிரிழந்தார்.


