News April 30, 2024
ஈரோடு ஸ்ட்ராங் ரூமில் டிஸ்பிளே கோளாறு

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி தொலைக்காட்சியில் டிஸ்பிளே கோளாறு ஏற்பட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள கேமரா காட்சிகள் 10 நிமிடங்களுக்கு தெரியவில்லை. இது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, அங்கு உடனடியாக வந்த அதிகாரிகள், அப்பிரச்னையை சரி செய்தனர். தற்போது ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி காட்சிகள் சீராக ஒளிபரப்பாகிறது.
Similar News
News August 28, 2025
ஜம்முவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இன்று அதிகாலையிலேயே நடந்த தீவிரவாத தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு & காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் ராணுவத்தினர் மற்றும் அம்மாநில போலீஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
News August 28, 2025
விஜய் கட்சியுடன் கூட்டணியா? முடிவில் மாற்றம்

மதுரை தவெக மாநாட்டுக்கு பின், விஜய்யை விமர்சித்த <<17535242>>பிரேமலதாவின் <<>>நிலைப்பாட்டில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், 20 சீட்டுக்கு மேல் கேட்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ‘கூட்டணி ஆட்சி’ என்ற மையப் புள்ளியை வைத்து, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க பிரேமலதா முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.
News August 28, 2025
8-வது ஆண்டில் திமுக தலைவராக ஸ்டாலின்..

கருணாநிதி மறைவுக்கு பிறகு, திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற நாள் இன்று. இதன் பிறகான 2019 (ஒரு இடம் தவிர) லோக் சபா தேர்தல், 2021 பேரவைத் தேர்தல் (தனிப்பெரும்பான்மை), 2024 லோக் சபா தேர்தல் என அனைத்திலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. அதேநேரம், கட்சிப் பணிகளிலும் பல முன்னெடுப்புகளை அவர் எடுத்துள்ளார். ஸ்டாலினின் அரசியல், கட்சி பணிகளுக்கு உங்கள் மார்க் என்ன?