News December 20, 2025
பெரம்பலூர்: விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தெரணி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி புதிய சட்டம் இயற்றி 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைவு செய்யும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Similar News
News December 24, 2025
பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா, சட்டமன்ற தொகுதிகள், பேருராட்சிகள் என்னென்ன இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?
4 தாலுகா:
1.பெரம்பலூர்
2.குன்னம்
3.வேப்பந்தட்டை
4.ஆலத்தூர்
2 சட்டமன்ற தொகுதி:
1.பெரம்பலூர் (தனி)
2.குன்னம்
✅1 நாடாளுமன்ற தொகுதி
1.பெரம்பலூர்
4 பேரூராட்சிகள்:
1.அரும்பாவூர்
2.இலப்பைகுடிக்காடு
3.குரும்பலூர்
4.பூலாம்பாடி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 24, 2025
பெரம்பலூர்: ரூ.1 லட்சம் பரிசு பெற வாய்ப்பு!

மாசுக்கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்து விருதும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் தமிழக அரசு வழங்க உள்ளது. இந்த விருதுபெற விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பெரம்பலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.
News December 23, 2025
பெரம்பலூர்: திமுக ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (ம) புதிய அம்சங்களை உள்ளடக்கிய, ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை கண்டித்து, நாளை (டிச.24) பெரம்பலூர் மாவட்டம் முழுவதும், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டார். இதில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்த நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளார்.


