News December 20, 2025
திருப்பூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த லிங்கை <
Similar News
News January 21, 2026
திருப்பூர் அருகே சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

தாராபுரம் அருகே கொளஞ்சிவாடி சொக்கநாதபாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி பாப்பாத்தி. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததால், பாப்பாத்தி கணவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்துவந்த தண்டபாணி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 21, 2026
திருப்பூரில் பெண்கள் அதிரடி கைது!

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாந்தி பிரோ (50), ஹிரோன் பொனியா(40) என்பதும் அவர்களிடம் 7 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News January 21, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108 ஐ அழைக்குமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.


