News April 30, 2024
சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாளாகும். புதிய விதிகளின் படி ஒரு நிதியாண்டில், முதல் அரையாண்டு நிதியை ஏப்ரல் 30, இரண்டாவது அரையாண்டு நிதியை அக்டோபர் 30க்குள் செலுத்த வேண்டும். அதன்படி, இன்றைக்குள் வரியை செலுத்தினால் அதிகபட்சமாக ₹5,000 தள்ளுபடி வழங்கப்படும். தாமதமாக வரி செலுத்தினால் மாதம் 1% தனி வட்டி விதிக்கப்படும்.
Similar News
News March 24, 2026
BREAKING: வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 உயர்ந்தது

தங்கம், வெள்ளி விலை நேற்று முதல் ஏற்ற இறக்கங்களுடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. இன்று காலை 1 கிராம் வெள்ளி ₹10 குறைந்த நிலையில், மாலை ₹10 அதிகரித்துள்ளது. இதன்படி, தற்போது 1 கிராம் வெள்ளி ₹250-க்கும் 1 கிலோ ₹2.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.
News March 24, 2026
மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு: EPS

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைத்திட, 2020-ல் அப்போதைய அதிமுக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இந்நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 7.5% இடஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். 7.5% இடஒதுக்கீட்டால் கடந்த 6 ஆண்டுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
News March 24, 2026
நாடு முழுவதும் லாக் டவுன்.. இந்த நாள் ஞாபகம் இருக்கா?

வெளியூரில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தோர் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகினர். 3 மாதங்களுக்கு தேவையான பலசரக்குகளை வாங்க கடைகள் முன் மக்கள் குவிந்தனர். ஏனென்றால், ‘நாடு முழுவதும் லாக் டவுன்’ என PM மோடி, 2020-ல் இதே நாளில் தான் அறிவித்தார். இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக தற்போது நிலவும் கேஸ் தட்டுப்பாட்டால் மீண்டும் லாக் டவுன் வருமோ என்று பலரும் கருத்துகளை SM-ல் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.


