News December 20, 2025

கடலூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் அதிரடி கைது

image

கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேற்று பாசிகுளம் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் (26), ராஜ்குமார் (23) மற்றும் 18 வயது வாலிபர் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News December 22, 2025

கடலூர்: அதிசய கிணறு கொண்ட பெருமாள் கோயில்!

image

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிசேஷன் கிணறு உள்ளது. பெருமாளுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டபோது, ஆதிசேஷன் தன் வாலால் பூமியைப் பிளந்து, நீரூற்றை ஏற்படுத்தி பெருமாள் தாகத்தை தணித்தார் என சொல்லப்படுகிறது. இந்த கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை கிணறாகவும் கருதப்படுகிறது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 22, 2025

கடலூர்: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 22, 2025

கடலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

image

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077
பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!