News December 20, 2025

சரவணம்பட்டியில் பெண் அடித்துக் கொலை!

image

கோவை சின்னமேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம் (53). இவர் கடைக்குள், போலி நகை அடகு வைத்த பெண் சுதா (39) என்பவர் மீது கோபம் கொண்டு, நண்பர்களுடன், அவரை அடித்து கொலை செய்தார். பிவிசி பைப்பால் தாக்கப்பட்ட சுதா நேற்று முன்தினம் உயிரிழந்தார். பின் ராஜாராம் சரவணம்பட்டி போலீசில் நேற்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Similar News

News December 25, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எஸ்.எஸ். தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ் கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் கலெக்டரேட் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) மற்றும் புளியகுளம் சாலை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்
ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 25, 2025

கோவையில் நிலம் வாங்க மானியம்: விண்ணபிப்பது எப்படி?

image

1).நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.)குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3).2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4).100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5). <>newscheme.tahdco.com<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6).மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம். SHAREit

News December 25, 2025

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்களிடையே நுகர்வோர் உரிமை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்கள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் 50 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!