News December 20, 2025
சேலம் வாக்காளர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் மொத்தம் 3,62,439 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். எனவே, பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் அல்லது voters.eci.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 13, 2026
சேலம் இளைஞர் துடிதுடித்து பலி!

திருவண்ணாமலையைச் சேர்ந்த சச்சின்(23), மதுபோதைக்கு அடிமையானதால் சேலம் குரங்குசாவடி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்தும் அங்கேயே தங்கியிருந்த அவர், நேற்று பொங்கல் கொண்டாட்டத்திற்காகக் கரும்பு கட்டுகளை மாடிக்கு எடுத்துச் சென்றார். அப்போது மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சச்சின் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை!
News January 13, 2026
சேலம்: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால்<
News January 13, 2026
சேலம்: கல்லூரி மாணவியை கொன்று காசிக்குத் தப்பியோட்டம்?

திருநெல்வேலி வீரவநல்லூரைச் சேர்ந்த ஓமியோபதி மாணவி வர்ஷினி, கடந்த 6-ஆம் தேதி சேலத்திலுள்ள விடுதியில் படுகொலை செய்யப்பட்டார். திருமணமானவருடன் மகளுக்கு இருந்த காதலால் ஆத்திரமடைந்த தந்தை வரதராஜனே இக்கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தலைமறைவான அவர் ரயில் மூலம் காசிக்குத் தப்பிச் சென்றது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரைப் பிடிக்க சேலம் தனிப்படை போலீசார் தற்போது காசிக்கு விரைந்துள்ளனர்.


