News December 20, 2025
குமரி: 625 லிட்டர் மண்ணெண்ணைய் பதுக்கல்

சாமியார் மடம் அருகே கல்லு விளையில் உள்ள ஒரு தோட்டத்தில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் திருவட்டாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையில் போலீசார் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 33 கேன்களில் 625 லிட்டர் மண்ணெண்ணை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News December 25, 2025
குமர்: தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு!

பள்ளியாடி சேரிக்கடை செல்லத்துரையின் மனைவி சொர்ணம் (75). சற்று மனநலம் பாதித்த இவர் கடந்த டிச.18.ம் தேதி விறகு அடுப்பில் தீ மூட்டிய போது எதிர்பாராதவிதமாக தீ சேலையில் பிடித்து, தீ உடல் முழுவதும் பரவி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கைப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.24) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News December 25, 2025
ரெயில் மீது கல்வீசிய சிறுவன் கைது

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
News December 25, 2025
கன்னியாகுமரியில் மட்டும் 23,043 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


