News December 20, 2025

அரியலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

image

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு மையத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு சோதனை நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியை பார்வையிட்டனர். மேலும், அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் தங்களது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தனர்.

Similar News

News December 25, 2025

அரியலூர் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

image

அரியலூர் என்ற பெயர், “அரி” (விஷ்ணு) மற்றும் “இல்” (இல்லம்) ஆகிய சொற்களின் சேர்க்கையால் உருவானது. இது விஷ்ணுவின் இருப்பிடம் அல்லது இல்லம் எனப் பொருள்படும். பின்னர் இது “அரியிலூர்” என்றும், அதிலிருந்து அரியலூர் எனவும் மருவியதாகக் கூறப்படுகிறது. அரியலூர் பகுதி வைணவ வழிபாட்டுத் தலங்கள் அதிகம் உள்ள இடமாக இருந்ததால், இப்பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கும் மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

அரியலூர்: தீயணைப்பு நிலையங்களின் எண்கள்!

image

தீ விபத்துக்கள் அல்லது ஏதேனும் அவசர காலங்களில், தயக்கமின்றி தீயணைப்புத் துறையின் அவசர எண்ணை அழைக்கலாம். பெரம்பலூர் கோட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு நிலையங்களின் எண்கள்:
1.பெரம்பலூர் – 04328 224255
2.ஜெயம்கொண்டம் – 04331 250359
3.செந்துரை – 04329 242399
4.துறையூர் – 04327 222401
5.வேப்பூர் – 04328 26640
ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

அரியலூர்: செவிலியர்கள் தொடர் போராட்டம்

image

அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்கள் பணி நிரந்தரம் வேண்டியும், நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் போராட்டம் தொடரும் என முழக்கம் எழுப்பினார். மேலும் செவிலியர்கள் தேர்தல் வரும் நேரத்திலாவது தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

error: Content is protected !!