News December 20, 2025

ஈரோட்டிற்கு கூடுதலாக ரூ.400 கோடி!

image

ஈரோடு மாவட்டத்துக்கு இந்த ஆண்டு பயிர்க்கடன் வழங்க கூடுதலாக ரூ.400 கோடி அரசிடம் கேட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த தொகை டிசம்பர் மாதம் வந்து விடும் என இருந்தோம். ஆனால் வரவில்லை. அப்படி ஏதேனும் தொகை வந்தால் 31-ந் தேதிக்குள் கடன்கள் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தகவல் தெரிவித்தார்.

Similar News

News January 15, 2026

தாளவாடி மலைப் பகுதியில் பெரும் சேதம்!

image

ஆசனூர் வனக்கோட்டம் சீரகல்லி வனசரகத்திற்கு உட்பட்ட அருள்வாடி சுற்று வட்டார பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்கள், கரும்பு, வாழை ஏனைய விவசாய பொருட்கள் விவசாய உபகரணங்கள் போன்றவற்றை அனுதினமும் சேதம் விளைவித்து வருகிறது. யானைகள் வனத்தை விட்டு வெளியேறாது தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

News January 15, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

ஈரோடு ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில் சாதாரண விசைத்தறிகளில் ரேப்பியர் உபகரணங்களைப் பொருத்தவும், புதிய ரேப்பியர் தறிகளை விநியோகிக்கவும் விருப்பமும் அனுபவமும் உள்ள விநியோகஸ்தர்கள் வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சரக கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ (அ) 9894360232 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2026

ஈரோடு: 10th போதும் போஸ்ட் ஆபீஸில் வேலை! NO EXAM

image

ஈரோடு மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!