News December 20, 2025

திருச்சி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

கடந்த 2019ம் ஆண்டு மணப்பாறை ஆண்டவர் கோவில் பகுதியில் ஜெகதீஷ் பாண்டியன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டடார். இவ்வழக்கில் கைதான வேடசந்தூரைச் சேர்ந்த அரவிந்த்-க்கு ஆயுள் தண்டனையும், பேகம்பூரைச் சேர்ந்த முத்துவேல், திருச்சியைச் சேர்ந்த பாதுஷா, ஆனந்த், தேனியைச் சேர்ந்த மதன்குமார் உள்ளிட்டோருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Similar News

News December 31, 2025

திருச்சியில் அதிர்ச்சி: மாணவர் விடுதியில் போதை கும்பல் கைது

image

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில், மாணவர்கள் என்ற போர்வையில் தங்கி இருந்து போதை மாத்திரை விற்பனை செய்த 4பேரை, தனிப்படை போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 180 போதை மாத்திரைகள் மற்றும் 3 கத்திகளையும் பறிமுதல் செய்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News December 31, 2025

திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

திருச்சி: ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

image

திருச்சியில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் நாளை (ஜன.1) முதல் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி – திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் காலை 7:20 க்கு பதிலாக 7:15 க்கும், திருச்சி – திண்டுக்கல் டெமு ரயில் மாலை 6:10க்கு பதிலாக மாலை 6:05 க்கும், திருச்சி – திருவாரூர் பயணிகள் ரயில் இரவு 8:25 க்கு பதிலாக 8:20 க்கும் புறப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!