News December 20, 2025

தூத்துக்குடி: பட்டப்பகல் படுகொலை.. 2 பேர் அதிரடி கைது

image

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (30). கூலித் தொழிலாளியான இவரை சாத்தான்குளம் மதுபான பார் தொழிலாளர்கள் சுந்தர், ஜெகதீஷ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக நேற்று பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடினர். இந்நிலையில், சாத்தான்குளம் பகுதியில் பதுங்கி இருந்த இருவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News December 20, 2025

தூத்துக்குடி: வாக்காளர்கள் நீக்கம் விவரம் தெரிந்துகொள்ள CLICK!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர்ந்து நேற்று (டிச 19) வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 14,90,685 வாக்காளர்கள் இருந்த நிலையில் SIR க்கு பின்னர் வாக்காளர்களின் எண்ணிக்கை 13,28,158 ஆக உள்ளது. இதில் 1,62, 527 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து அறிய <>LINKல் <<>>கிளிக் செய்யவும்

News December 20, 2025

தூத்துக்குடி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0461-2340522 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

தூத்துக்குடி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!